Skip to main content

சீனாவில் எய்ட்ஸ் அதிகரிப்பு...காரணத்தால் அதிர்ந்த ஆராய்ச்சியாளர்கள்...

Published on 01/10/2018 | Edited on 01/10/2018
aids


சீனா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பலர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். கிட்டத்தட்ட 8,20,000க்கும் மேலானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த வருட காலண்டில் மட்டும் 40,000 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது. இந்த எய்ட்ஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்புக்கு மிகவும் முக்கிய காரணமாக இருப்பது பாலியலால் உருவாகும் எய்ட்ஸ்தான் என்கிறது. 
 

தொடக்கத்தில் சீனாவில் இரத்தம் வழங்குவதன் மூலமாக பரவும் எய்ட்ஸ்தான் அதிக பாதிப்பை தந்துள்ளது. ஆனால், இது தற்போது முற்றிலுமாக குறைக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கின்றனர். பாலியல் உறவாலே சீனாவில் எய்ட்ஸ் அதிகரித்துள்ளது என்பதை பார்த்த ஆய்வாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் அந்த அறிக்கையில், பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளை வைத்துக்கொள்வதாலேயே எய்ட்ஸ் நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்