Published on 04/10/2018 | Edited on 04/10/2018
செல்ஃபோன்களில் பெயர் தெரியாமல் வெறும் எண்ணில் இருந்துமட்டும் வரும் ஆழைப்புகள் யாருடையது என்று கண்டறிந்து அவர்களின் பெயரை நமக்கு அடையாளம் காட்டிக்கொண்டிருந்த ’ட்ரு காலர் ஆப்’ இன்று புதிய அப்டேட்-வுடன் வந்திருக்கிறது. இனி ட்ரு காலர் ஆப் மூலம் சேட் (chat) செய்யலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த அப்டேட் மூலம் இனி வதந்திகளை பரப்பும் செய்திகளையும் கட்டுக்குள் கொண்டுவரலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வதந்திகள்கொண்ட செய்தி என்றால் அதனை புகார் செய்யும் வசதியையும் கொண்டிருக்கிறது.