Published on 25/07/2019 | Edited on 25/07/2019
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் பொறுப்பிற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் பிரீத்தி படேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாபை பூர்விகமாக கொண்ட ப்ரீத்தியின் பெற்றோர் பணி நிமித்தமாக இங்கிலாந்து நாட்டில் குடியேறினர். 47 வயதான ப்ரீத்தி கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.