கடந்த ஞாயிறு இரவு மதுரை சிம்மக்கல் தைக்கால் தெரு பாலத்தின் அருகில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த செல்லூர் டெல்டா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்ற வாலிபரை போலீசார் லத்தியால் பின் மண்டையில் தாக்கியதில், தங்கவேல் என்பவரது மகன் விவேக் (வயது சுமார் 38) என்பவர் காதில் இரத்தம் வந்து சம்பவ இடத்தில் மயங்கிய நிலையில் மதுரை அரசுமருத்துவமனையில் சிகச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின் சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார். இதனால் அரசு மருத்துவமனையில் பதட்ட நிலை ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அன்று இருசக்கர வாகனத்தில் நிற்காமல் போனதற்காக போலிஸார் லத்தியால் தாக்கியதில் இறந்த விவேக்கின் மனைவி கணவர் இறந்ததை தாங்க முடியாமல் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். மீட்கப்பட்ட அவர் மிக கவலைகிடமாக உள்ளதால் மருத்துவமனை வளாகம் பதட்டமாக உள்ளது.