ஆசிரியர்கள் பணியில் சேர நாளை காலை 9 மணி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக பள்ளி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவதை தொலைபேசி மூலமாகவும் குறுந்தகவல் மூலமாகவும் அல்லது வாட்ஸ்அப் மூலமாகவும் தெரியப்படுத்தலாம் என்ற அறிவிப்பையும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பணிக்கு திரும்பாவிட்டால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை காலை 9 மணி வரை ஆசிரியர்கள் பணியில் திரும்ப பணிக்கு திரும்ப இறுதி அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்ட கால அவகாசத்தை பயன்படுத்தாமல் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வில்லை என்றால் அவர்களது பதவி இடம் பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.