Skip to main content

12 மணி நேர வேலை; தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

Ministerial consultation with workers unions

 

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் இந்த சட்ட மசோதாவிற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது. 

 

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்திய சட்ட மசோதா குறித்து தொழிற்சங்கங்களுடன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கணேசன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்ட மசோதா குறித்தும் விளக்கி கூறப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்