
கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்துவருகிறது. தற்போது 2021 - 2022 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது.
இந்நிலையில், இன்றுமுதல் (22.06.2021) பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பாடநூல் வழங்கப்படுகிறது. பல மாதங்களுக்குப் பிறகு கரோனா நோய் பரவல் தற்போது குறைந்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசானது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பள்ளிகளில் இணையதளம் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கான அனுமதியை பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளதால் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை இன்றுமுதல் பள்ளிகள் வழங்க ஆரம்பித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் பள்ளியில் மாணவர்கள் விலையில்லா பாடநூலை இன்று காலை முதலே வாங்கி செல்ல ஆர்வமுடன் வந்தனர்.