![Women's Siege office of TTV Dinakaran with a 20-rupee note!](http://image.nakkheeran.in/cdn/farfuture/1Z6Ri5gYxwSQxizPuKA-eMCsd4K0BGRUNFKCl42N0XA/1552126452/sites/default/files/inline-images/z96.jpg)
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவான டிடிவி தினகரன் தொகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை என நேற்று இரவு அப்பகுதி பெண்கள் 20 ரூபாய் நோட்டுடன் தினகரன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
![Women's Siege office of TTV Dinakaran with a 20-rupee note!](http://image.nakkheeran.in/cdn/farfuture/k6q1-Z-lSqFMzmP_Ohr3SzQLHMoAfxBaH3Lx31yrQiE/1552126474/sites/default/files/inline-images/z95.jpg)
சென்னை தண்டையார் பேட்டை இரட்டைக்குழி தெருவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை 20 ரூபாயுடன் முற்றுகையிட்ட பெண்கள், டிடிவி தினகரன் எம்.எல்.ஏவாக இருக்க தகுதியே இல்லாதவர். தொகுதிப்பக்கமே அவர் வருவதில்லை, சாக்கடை நிரம்பி வழிகிறது இதனால் பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது, எல்லா மருத்துவமனையிலும் போய் பாருங்கள் ஆர்கே நகர் குழந்தைகள் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர் என்று, என கூறி ஆர்பாட்டம் நடத்திய பெண்கள் 20 ரூபாய் நோட்டுகளை அலுவலகத்தில் வீசி விட்டு இனி அந்த கட்சி இந்த கட்சி என இல்லாமல், பணத்திற்காக வாக்களிக்காமல் எங்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என கூறினர்.