Skip to main content

சிறை தண்டனை முடிந்து திரும்பிய பெண் - பெற்ற பிள்ளைகளை பார்க்க முடியாமல் தற்கொலை

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

Woman passes away after freedom from prison

 

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரி(50). விவசாயான இவர், தனது இளைய மகள் அம்சவல்லி என்பவரை காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சிறகிழந்த நல்லூரைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார். அம்சவல்லி - லட்சுமணன் தம்பதிக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். 

 

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அம்சவல்லி கணவரின் தாய் திடீரென இறந்துவிட்டார். அவரது இறப்புக்கு காரணம் அம்சவல்லிதான் எனக் கூறி அந்த மரணம் குறித்து குமராட்சி காவல் நிலையத்தில் அவரது கணவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது போலீசாரின் விசாரணையில் அம்சவல்லி மாமியாரை கொலை செய்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக 2014ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கில் அம்சவல்லிக்கு கொலைக் குற்றம் செய்ததற்காக நீதிமன்றம் மூலம் சிறைதண்டனை கிடைத்துள்ளது. 

 

சிறைதண்டனை அனுபவித்த அம்சவல்லி 2021ஆம் ஆண்டில் தண்டனை முடிந்து விடுதலையாகி தனது தந்தை பக்கிரிசாமியுடன் காவனூரில் வசித்து வந்துள்ளார். இவரது குழந்தைகள் இருவரும் கணவருடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தனது குழந்தைகளைப் பார்க்க முடியாமல் தவித்து வந்த அம்சவல்லி, அதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். 

 

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்துள்ளார் அம்சவல்லி. இதுகுறித்து அவரது தந்தை கருவேப்பிலங்குறிச்சி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்சவல்லி தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்