காவல்துறையில் பணியாற்றும் போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் காவல்துறையின் சார்பில் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் அக்டோபர் 20 ந்தேதி மினி மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்துயிருந்தது மாவட்ட காவல்துறை. இந்த இந்த மாரத்தான் போட்டியில் காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் கலந்துக்கொண்டனர்.
இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் கொடியசைத்து துவங்கி வைத்தார். சத்துவாச்சாரியில் இருந்து நேதாஜி விளையாட்டரங்கம் வரை ஓடி மாரத்தான் நிறைவு பெற்றது. இந்த 5 கிலோ மீட்டர் தூரத்தை வேகமாக ஓடிக்கடந்த பெண் காவலர் யுவராணிக்கு முதல் பரிசும், காமாட்சி இரண்டாம் பரிசும் , ஆண்கள் பிரிவில் நிஷாந்த் முதல் பரிசும், ராமு இரண்டாம் பரிசும் பெற்றனர். அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் கோப்பைகளையும் சான்றுகளையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.