Skip to main content

மீண்டும் ஊருக்குள் சின்னத்தம்பி யானை!

Published on 31/01/2019 | Edited on 31/01/2019

 

WILD ELEPHANT CHINNATHAMPI IN AGAIN ENTER VILLAGE

 

கோவை டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட சின்னத்தம்பி யானை மீண்டும் ஊருக்குள் நுழைந்தது.

அண்மையில் கோவை டாப்சிலிப் வனப்பகுதிக்குள் விடப்பட்ட  சின்னத்தம்பி யானை பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சி கிராமப்பகுதிக்குள் நுழைந்தது. இதனால் அப்பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. கிராமத்தில் நுழைந்த காட்டுயானை சின்னத்தம்பியை விரட்ட வனத்துறை போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தாயை பிரிந்த குட்டி யானை; சோக செய்தியை வெளியிட்ட வனத்துறை

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Baby elephant dies after being separated from its mother

கோவையில் தாய் யானையை பிரிந்து தவித்து வந்த குட்டி யானை உயிரிழந்து விட்டதாக வனத்துறை அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் 30.05.2024 அன்று மயங்கிய நிலையில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்றை வனத்துறையினர் கண்டறிந்தனர். உடன் 4 மாத குட்டி யானையும் இருந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். அதே சமயம் தாயை எழுப்ப குட்டி யானையும் பாசப் போராட்டம் நடத்தியது. இதற்கிடையே தாயிடம் பால் குடிக்க முயன்ற குட்டி யானைக்கு லாக்டோஜன் மற்றும் இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை வனத்துறையினர் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து கிரேன் மூலம் யானை தூக்கி நிறுத்தப்பட்ட நிலையில் நோய் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சையின் பலனாக கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு நாட்கள் கிரேன் மூலம் தூக்கி நிறுத்தி வைக்கப்பட்ட தாய் யானைக்கு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வந்தது. நாளுக்கு நாள் கொடுக்கப்பட்ட சிகிச்சை மூலம்  உடல்நலம் தேறிய நிலையில் கிரேனில் இருந்து வெளியேற்றப்பட்ட தாய் யானை வனப்பகுதிக்குள் தானாக சென்றது. ஆனால் குட்டி யானை தாய் எதிர்கொள்ளவில்லை. வனத்துறை முயற்சித்தும் தாய் யானையிடம் குட்டி யானையை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து கடந்த ஒன்பதாம் தேதி மருதமலையில் இருந்து  நீலகிரி தெப்பக்காட்டுக்கு கொண்டுவரப்பட்ட குட்டி யானை, யானைகள் வளர்ப்பு முகாமில் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்ட குட்டி யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது குட்டி யானை உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளது.

Next Story

வனத்துறை அலுவலர்கள் அடாவடி வசூல்; வைரலாகும் வீடியோ 

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Forest officials taking bribes from loggers

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேலூர் மண்டல வன பாதுகாப்பு படை அலுவலராக மூர்த்தி பணியாற்றி வருகிறார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வன பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் இவர் பல இடங்களில் தனது வசூல் வேட்டையில் கைவரிசை காட்டி உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நிம்மியம்பட்டு, ஆலங்காயம், ஏலகிரி, புதூர்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமூக விரோதிகள் மரங்களை வெட்டி செல்கின்றனர். இதனைத் தடுக்கும் அதிகாரியான மூர்த்தி, உடன் இருக்கும் வனவர் ஜோதி மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோரை கை பாகையாக வைத்துக் கொண்டு தீவிர வசூல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளார்.

அது மட்டும் அல்லாமல் தன்னுடைய வசூல் சாம்ராஜ்யத்தைப் பயன்படுத்தி வாகனத்தில் வெட்டப்பட்ட மரங்களை வியாபாரத்திற்கு எடுத்துச் செல்லும் நபரிடம் பகிரங்கமாக மாமூல் கேட்டது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேஞ்சருக்கு மட்டுமில்ல எங்களுக்கும் கொடுக்கணும், மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். அதேபோல வேறு ஒரு நபரிடம் 3000 ரூபாய் லஞ்ச பணத்தை வாங்கி தனது பர்சில் வைக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.