திருவாரூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்காமல் திரும்பி சென்ற சாலை அமைக்கும் இயந்திரங்கள் மற்றும் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை, திருவாரூர், நாகை தேசிய நெடுஞ்சாலை இரு வழிச்சாலையாக மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்து. அப்பணிகள் ஒரு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி முதல் சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு இதுவரை தொடங்கப்படவில்லை. இதன் காரணமாக சாலை கடுமையாக சேதமடைந்து விபத்துக்கள் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டது.
இதனையடுத்து திருவாரூர் மாவட்ட மக்கள் சாலையை சீர்மைக்க வேண்டும் என வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் அரசு முதற்கட்டமாக சேதமடைந்த சாலையை சீர்மைக்க ரூ18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்கியது.
திருவாரூர் அருகே அடியகமங்கலம் மற்றும் கிடாரங்கொண்டான் பகுதிகளில் சாலை சீர்மைக்க இயந்திரங்கள் மற்றும் லாரிகளை யோகா என்ற ஓப்பந்த நிறுவனம் கடாரங்கொண்டான் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில் சாலையை சீரமைக்காமல் ஓப்பந்த நிறுவனம் வாகனங்களை வேறு பணிகளுக்காக காரைக்கால் எடுத்து செல்ல முயன்றுள்ளனர். இந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையை சீர்மைத்தால் மட்டுமே வாகனங்களை செல்ல அனுமதிப்போம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.