தமிழகத்தில் இன்று (04/03/2022) நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் கட்சிகள் வெற்றி பெற்றுள்ள இடங்கள் தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "21 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான தேர்தலில் 20- ல் தி.மு.க., ஒரு மாநகராட்சியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மாநகராட்சி துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலில் தி.மு.க.- 15, காங்கிரஸ்- 2, ம.தி.மு.க.- 1 இடத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. மாநகராட்சித் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலில் சிபிஐ, சிபிஎம், விசிக தலா ஒரு இடத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
138 நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் தி.மு.க.- 125, அ.தி.மு.க.- 2, காங்கிரஸ், ம.தி.மு.க., விசிக தலா ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 4 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளது. நகராட்சித் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் தி.மு.க.- 98, காங்கிரஸ்- 9, அ.தி.மு.க.- 7, ம.தி.மு.க.- 4, சிபிஐ, சிபிஎம், விசிக தலா- 2 இடங்களிலும், சுயேட்சைகள்- 3 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளது.
489 பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கானத் தேர்தலில் தி.மு.க.- 395, காங்கிரஸ்- 20, அ.தி.மு.க.- 18, பா.ஜ.க.- 8 இடங்களிலும், சிபிஎம்- 3, ம.தி.மு.க., அ.ம.மு.க. தலா- 2 இடங்களிலும், சிபிஐ, விசிக, ம.ம.க. தலா 1 இடத்திலும், சுயேட்சைகள் 25 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளது.
நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் 4 இடங்களில் நடைபெறவில்லை. நகராட்சித் துணைத் தலைவர் தேர்தலில் 11 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறவில்லை. பேரூராட்சித் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் 13 இடங்களில் நடைபெறவில்லை. பேரூராட்சித் துணை தலைவருக்கான மறைமுகத் தேர்தல் 35 இடங்களில் நடைபெறவில்லை." இவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.