Skip to main content

எப்போது வெளியாகும் திமுக வேட்பாளர் பட்டியல்... உட்சபட்ச எதிர்பார்ப்பில் உ.பிக்கள்!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

When will the DMK candidate list be released ... UPs in anticipation!

 

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்குத் தலா 6 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும், ஆதி தமிழர் பேரவைக்கு 1 தொகுதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 தொகுதி, மக்கள் விடுதலை கட்சிக்கு 1 தொகுதி, அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி என ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மொத்தம் 61 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

 

173 தொகுதிகளில் திமுக  போட்டியிட உள்ளது. அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள் என அறிவித்த நிலையில், நேற்று முன்தினம் (10.03.2021) திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் நேற்று மாலை திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியடப்படும் என தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது இன்று (12.03.2021) காலை 10 மணிக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அறிவிப்புகளுக்குப் பின்னரும் வேட்பாளர் பட்டியல் வெளியாவது தாமதமாகி வரும் நிலையில் எப்போது வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என உட்சபட்ச எதிர்பார்ப்பில் உடன்பிறப்புகள் உள்ளனர். இன்று காலை 11 மணிக்கு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்