![When is 1,000 rupees per month for women? - cabinet meeting today!](http://image.nakkheeran.in/cdn/farfuture/hOBdgs-7qsMsoM2PcldKFyicoVLX9_z8ueSNBH2X8Ws/1646447728/sites/default/files/inline-images/tn%20govt6_0_13_0.jpg)
மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நேற்று காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வான நிலையில், சில இடங்களில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையே திமுக வேட்பாளர்கள் வென்றுள்ளனர். தலைமையின் அறிவிப்புக்கு மாறாக செயல்படுவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் சில இடங்களில் குற்றச்சாட்டை வைத்த நிலையில் ''கட்சித் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கட்சித் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன்'' என தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த பரபரப்பு சூழலுக்கு நடுவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.