Skip to main content

ஆசிரியர் செல்வக்குமாருக்கு 'வானிலை பேரறிஞர்' விருது... தோப்புத்துறை திருமண விழாவில் கெளரவிப்பு

Published on 26/05/2022 | Edited on 26/05/2022

 

'Weather Scholar' Award for Teacher Selvakumar ... Honored at the Tophuthurai Wedding Ceremony

 

நாகை மாவட்டம் தோப்புத்துறையில் முஹம்மதியா இல்ல திருமண நிகழ்வு இன்று நடைபெற்றது. மணமகன்  D. தன்வீர் அகமதுவுக்கும், மணமகள் M. பாத்திமாவுக்கும் நடைபெற்ற திருமண நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மு. தமிமுன் அன்சாரி, உ.தனியரசு , நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், தமிழக மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.

 

இந்நிகழ்வில் பிரபல தனியார் வானிலை ஆய்வாளர், ஆசிரியர். செல்வக்குமாருக்கு அவரது சேவையை பாராட்டி 'வானிலை பேரறிஞர்' என்ற விருது வழங்கப்பட்டது.கஜா புயல் வீசிய தருணத்தில்  சரியான முறையில் புயலின் தாக்கத்தை கணித்து , மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதில் செல்வக்குமாரின் பெரிதும் பாராட்டப் பெற்றார்.

 

அதை மதிக்கும் வகையில், இப்பகுதியில் கல்வி, சுற்றுச்சூழல், நல்லிணக்கம் ஆகிய பணிகளில் கடந்த 32 ஆண்டுகளாக இயங்கி வரும் முஸ்லிம் மாணவர் முன்னணி (MSF) சார்பில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. விருதை உ.தனியரசு முன்னாள் எம்எல்ஏ அளிக்க, ஆசிரியர் செல்வக்குமார் பெற்றுக் கொண்டார்.

 

பிரதிபலன் பாராமல் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு மக்களிடம் முன் எச்சரிக்கை செய்யும்  பணிகளில் ஈடுபட்டு வரும் அவருக்கு விருது வழங்கப்பட்டது பலராலும் பாராட்டப்படுகிறது.

 

இந்நிகழ்வில் கல்வி சேவகர் ஆரிபா, முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் பள்ளி துணை தாளாளர் முகம்மது யாஸின், மவ்லவி.JS.ரிபாயி, சமுதாய பிரமுகர் மெளலா.நாசர், வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் தென்னரசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் sk.வேதரத்தினம், நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் மா.மீ.புகழேந்தி, PVK பிரபு,ஜமாத் தலைவர் ஜபருல்லாகான், முன்னாள் ஜமாத் தலைவர் KM KI நவாஸ்தீன் , மவ்லவி .சாகுல் ஹமீது ஹஜ்ரத் , இலக்கிய பிரமுகர் புயல்.குமார் உள்ளிட்டோரும் பங்கேற்று வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

 

முன்னதாக மணமகளின் தந்தையும், முஹம்மதியா அறக்கட்டளையின் நிறுவனமான முகம்மது அலி அவர்கள் அனைவரையும் வரவேற்று விருந்தளித்து சிறப்பித்தார். தோப்புத்துறையின் சிறப்புகளை கூறும் பாடல் ஒன்றை பாடகர்.ஹாஜா பாடியதும். மாணவிகள் திருக்குர்ஆன் வசனங்களை ராகத்துடன் வாசித்ததும் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விருது வென்ற  'ஐயோ சாமி...’ பாடல் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ayyo sami gets edison award

அண்மையில் நடைபெற்ற 16வது எடிசன் திரைப்பட விருது விழாவில்  கவிஞர் பொத்துவில் அஸ்மினின்
 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' சிறந்த உணர்ச்சி பூர்வமான பாடல் (Best Sensational Song -2023) விருதினைப் பெற்றுள்ளது. 'நான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். 

பாடலை பிரபல இலங்கை இசையமைப்பாளர் சனுக்க இசையமைக்க இலங்கையை சேர்ந்த பிரபல பாடகி விண்டி பாடியுள்ளார். இலங்கையில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் இலங்கை தமிழ் பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்றுள்ளது. இவ்விருதினை பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர் சனுக்க, பாடகி விண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் மனோஜ் பாரதிராஜா, சென்னைக்கான ஆஸ்திரேலியா கவுன்சிலர் டேவிட் ஆகியோர் விருதை வழங்கினர்.
 

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.