Skip to main content

மாணவி இறப்புக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை: பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம்!

Published on 13/07/2018 | Edited on 13/07/2018


கோவை தனியார் கல்லூரியில் நடந்த பேரிடர் பயிற்சியில் மாணவி உயிரிழந்ததற்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

 

 

கோவை நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவ-மாணவிகள் பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது 2-வது மாடியில் இருந்து மாணவி லோகேஸ்வரியை பயிற்சியாளர் தள்ளியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பயிற்சியாளரின் அலட்சியமே மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டது.
  girl


இதனிடையே உயிரிழந்த மாணவியின் தந்தை நல்லா கவுண்டர் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சென்னையை சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


இந்த சம்பவம் இது குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. ஒரு இளம் உயிரை நாம் இழந்துவிட்டோம். இது எதிர்பாராத ஒன்று. பயிற்சியில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

எனினும், பயிற்சி அளித்தவர் என்டிஎம்ஏவை சேர்ந்தவர் இல்லை, இந்த சம்பவத்திற்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் தொடர்பில்லை என விளக்கம் அளித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்