வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் இளைஞர்களை ஒருங்கிணைத்து நீராதாரத்தை மேம்படுத்த நீர் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இளைஞர்கள் புதிய முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
கிராமங்களில் கிணறுகளும், குளங்களும், ஏறிகளும் நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது குளிப்பதற்காக அல்ல. நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் சமநிலையில் வைத்திட நம் முன்னோர்கள் ஏற்படுத்திய பொக்கிஷம். ஆனால் குளங்களும், கிணறுகளும் தற்போது காணாமல் போய்விட்டது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் நமக்கு தெரியாமல் போய்விட்டது.
இயற்கை வளங்களை பாதுகாப்பது, மழை நீர் சேமிப்பை வலியுறுத்தல், வீடுகள், வழிபாட்டுத் தலங்களில் நீர் சிக்கனத்தை வலியுறுத்தல், மரங்கள் நடுவதை தீவிரமாக செயல்படுத்துதல் போன்றவற்றை முன்னெடுத்து செயல்படுத்தவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் நீர் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
தோப்புத்துறையில் நடைபெற்ற நீர் அமைப்பு தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயற்கை ஆர்வலர்கள் நீர் சேமிப்பையும், இயற்கை வளங்களை பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டு பேசினர்.