Skip to main content

விருத்தாசலம் அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீர்!  தண்ணீரை வெளியேற்றிய கிராம இளைஞர்கள்! 

Published on 28/10/2018 | Edited on 28/10/2018
w

 

சென்னையிலுருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்வே பாதை கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வழியாக செல்கிறது. 
இந்த வழித்தடத்தில் விருத்தாசலம் அருகே கவணை, செம்பளாக்குறிச்சி, சித்தேரிக்குப்பம்  உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு செல்லும் சாலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு  ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. 
சுரங்கப்பாதை அமைக்கப்பட்ட நாள்முதலாக ஓரிரு நாள் மழை பொழிந்தாலும் சுரங்கபாதை முழுக்க தண்ணீர் தேங்கி பல மாதங்களுக்கு குளம் போல காட்சியளிக்கும். 

 

அதனை அவ்வழியே கடந்து செல்லும் 10 -க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் முடங்கிவிடும்.  அந்த சுரங்க பாதை வழியாக நகரப்பகுதிக்கு வரும்  விவசாய பொருட்களுடனான விவசாயிகள்,  பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், அன்றாட தேவைக்கும், வேலைக்கும் வரும் பொதுமக்கள்  செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. 

 

w

 

இதுகுறித்து அக்கிராமங்களின் மக்கள்  பலமுறை ரயில்வே நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும்  மனு அளித்தும்,  போராட்டங்கள், சாலை மறியல் செய்தும், எவ்வித நடவடிக்கையும் கடந்த 5 ஆண்டுகளாக  எடுக்கப்படவில்லை.

 

 இதனால் மிகுந்த மன வேதனை  அடைந்த அப்பகுதி இளைஞர்கள்  தங்கள் பகுதிகளுக்கு செல்வதற்கு ஒரே வழி இந்த சுரங்கப் பாதை என்பதால் இப்பாதையில் உள்ள தண்ணீரை வெளியேற்ற நிதி  சேர்த்து மோட்டார் மூலம் நீரை அகற்றி வருகின்றனர்.


அரசாங்கத்தை எதிர்பார்த்து ஏமாற்றத்தில் விரக்தியடையாமல் தங்களுக்கு தேவையான பாதையை தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட இளைஞர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

குப்பைக்கிடங்கில் கட்டப்படும் தரைநிலை தண்ணீர்தொட்டி! பொதுமக்கள் எதிர்ப்பு!

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

 

    திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் ஆத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு மேற்கே சித்தையன்கோட்டை சாலையில் பேருந்து நிறுத்தம் எதிரே ஒரு லட்சம் கொள்ளளவு உள்ள தரைநிலைத் தண்ணீர் தொட்டி புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இங்கிருந்து ஆத்தூர், அம்பாத்துரை, வீரக்கல், சீவல்சரகு உட்பட கிராம ஊராட்சிகளுக்கு குடிதண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

 

w


 புதிதாக கட்டப்பட்டு வரும் தண்ணீர் தொட்டி பகுதி ஏற்கெனவே குப்பைக்கிடங்காக இருந்ததால் தண்ணீர் தொட்டி கட்டப்படும் இடத்தைச் சுற்றி டன் கணக்கில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், துணிக் கழவுகள் மலைபோல் குவிந்துள்ளன. இதனால் தரைநிலை தண்ணீர்தொட்டி உறுதியற்ற நிலையில் கட்டப்படுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புகார் செய்கின்றனர். 

 

w


இதுகுறித்து ஆத்தூர் கிராம மக்கள் கூறுகையில்,  ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணிக்கு இந்த இடம் குப்பைக்கிடங்கு என்று தெரியும். தெரிந்திருந்தும் அங்கு பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிதண்ணீர் தொட்டி கட்ட அனுமதித்துள்ளார். ஆத்தூர் முழுவதும் களிமண் சட்டு உள்ள பூமி. இங்கு கட்டப்படும் கட்டிடங்கள் உயரமான கட்டிடங்கள் கட்டும்போது அதிக கவனம் செலுத்தி கட்டவேண்டும். இல்லையென்றால் கட்டிடம் விரிசல் அடையும். இங்கு கட்டப்படும் தரைநிலை தண்ணீர்தொட்டியில் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீரை தேக்கி வைப்பார்கள்.

 

குப்பைக் கழிவகள் மத்தியில் தண்ணிர் தொட்டி கட்டினால் பாதுகாப்பற்ற நிலை ஏற்படுவதோடு தண்ணீரில் அசுத்தங்கள் கலந்து தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. அதனால் தண்ணீர்தொட்டி கட்டப்படும் இடத்தைச் சுற்றியுள்ள குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலும் அகற்றிவிட்டு, தண்ணீர் தொட்டி கட்டினால்தான் உறுதி ஏற்படும். இல்லையென்றால் தண்ணீர் தொட்டி கட்டிடம் விரிசலடையும் என்றார்கள். மாவட்ட ஆட்சியர்கள் தனிக்கவனம் செலுத்தி பாதுகாப்பான முறையில் தண்ணீர்தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்!
 

Next Story

பேச்சிப்பாறையில் இருந்து தண்ணீர் திறப்பு

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

 

குமாி மாவட்டத்தில் பாசனத்திற்காக இன்று பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது.

        குமாி மாவட்டத்தில் விவசாயத்தின் ஜீவ நாடியாக இருந்து வருவது பேச்சிப்பாறை அணையின் தண்ணீா். இந்த அணையில் இருந்து ஆண்டுத்தோறும் ஜீன் 2 அல்லது 3-ம் நாள் விவசாயத்திற்கு தண்ணீா் திறந்து விடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டும் ஓரு மாதம் நெருங்கியும் தண்ணீா் திறந்து விடாததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்திருந்த பயிா்கள் கருகியது. விளை நிலங்களும் குளங்களும் வறண்டு காணப்பட்டது. 

 

k

         

பொதுவாக அணைகளில் 1500 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு இருந்தால் பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடலாம் என்று விதிமுறை உள்ளது. தற்போது மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாா்-1, சிற்றாா்-2 அணைகளில் தண்ணீா் இருப்பு இருக்கும் நிலையில் தண்ணீா் திறந்து விடாததால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

         

kk

இதையடுத்து கோதையாறு பாசனத்திற்காக 28-ம் தேதியில் இருந்து அடுத்த மாதம்  28-ம் தேதி வரை நாள் ஓன்றுக்கு விநாடிக்கு 850 கன அடி வீதம் தேவைக்கு ஏற்ப மற்றும் தண்ணீா் இருப்பு மற்றும் நீா் வரத்தை பொறுத்து அணையை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 

 

இந்த நிலையில் இன்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் மாவட்ட ஆட்சியா் பிரசாந் வடநேரா பேச்சிப்பாறை அணையில் இருந்து  தண்ணீரை திறந்து வைத்தாா். இதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்ததுடன் விவசாய நிலத்துக்கும் தண்ணீா் பெருக்கெடுத்தது.