Published on 22/08/2018 | Edited on 22/08/2018
\
கடந்த ஒருவாரமாக தொடர்ந்து பெய்துவந்த கனமழை காரணமாக கர்நாடக காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகமாகி அணைகளில் நீர் திறக்கப்பட்டது. அதன் காரணமாக மேட்டூர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்திருந்தது இந்நிலையில் தற்போது மழை பொழிவு குறைந்ததால் அணைகளில் நீர்திறப்பு விநாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கபினியில் இருந்து விநாடிக்கு 20,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கேஆர்எஸ் அணையில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 85,000 கனஅடியில் இருந்து 75,800 கனஅடியாக குறைக்கப்பட்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம்- 120.21 அடியாகவும் நீர் இருப்பு-93.80 டிஎம்சியாக தற்போது உள்ளது.