பாலியல் குற்றங்களை தூண்டும் ஆபாச இணைய தளங்களை தடை செய்! விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பெண்கள் மீது தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்முறைகள் சம்பவங்களில் அலட்சியமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விருத்தாசலம் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
![protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/rbbdHgsYvvMR24wGbmRchb8A-6H37pbLG-ENA8imlTQ/1533347628/sites/default/files/inline-images/IMG-20180718-WA0062.jpg)
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு சென்னையில் காது கேளாத சிறுமியை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய 17 குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும்,
பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், பாலியல் குற்றங்களுக்கு தூண்டுதலாக விளங்கும்.
![protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/E1enKgqHwzax-BvL9upwuNVG22Zn5AQHx7GU5AtPcCU/1533347628/sites/default/files/inline-images/IMG-20180718-WA0066.jpg)
![protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/echCyRxVcWdv0UdO4kH5RG8MZXG4c9utTH3Rf31gmZ8/1533347628/sites/default/files/inline-images/IMG-20180718-WA0065.jpg)
ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டியும், மத்திய, மாநில அரசுகள் மற்றும் காவல்துறையை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.