Skip to main content

வாக்காளர் நல்லவரா? கெட்டவரா?-அடையாளம் காட்டிவிடும் வாக்குச்சாவடி சீட்டு!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

வாக்காளர் நல்லவரா? வறுமையின் காரணமாக ஒவ்வொரு வாக்குக்கும் பணம் வாங்கக்கூடிய அவல நிலையில் வாழ்பவரா? என்பதை, அவரது வாக்குச்சாவடி சீட்டே அடையாளம் காட்டிவிடும்.  எப்படி தெரியுமா? இந்த உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் படு விவரமாகவே செயல்படுகிறார்கள். வாக்குச்சாவடி சீட்டைக் காண்பித்தால், அதன் பின்னால் சின்னதாக ஒரு  ‘இனிஷியல்’ போட்டு, ஓட்டுக்கான பணத்தையும் வாக்குச்சாவடி சீட்டையும், அந்த வாக்காளரிடம் கொடுத்து விடுகிறார்கள்.  எதற்காக இந்த நடைமுறை என்றால்,  ‘வீடு வீடாகப் போய் பணம் கொடுப்பதென்றால் அலைய வேண்டும்.  அந்தப் பழைய நடைமுறை தேவையில்லை. யாரெல்லாம் ஓட்டுக்குப் பணம் வாங்க  வேண்டுமென்ற ஆவலில் இருக்கிறார்களோ, அவர்களே நம்மைத் தேடி வந்து பெற்றுக்கொள்ளட்டும்’ என்று மாற்று யோசித்ததன் விளைவே, இந்தப் புதிய நடைமுறை. இதன்மூலம், ஏற்கனவே ஒரு வேட்பாளரிடம் பணம் வாங்கியவர், அதே வேட்பாளரிடம் மீண்டும் பணம் பெற முடியாது. ஏனென்றால், வாக்குச்சாவடி சீட்டைப் புரட்டிப் பார்த்தாலே, அவர் தன்னிடம் பணம் வாங்கியவரா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.

 

Is the voter good? Possible ballot slip!


இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரே வாக்காளர் எத்தனை வேட்பாளர்களிடம் வேண்டுமானாலும் பணம் பெற்றுக்கொள்ள முடியும். போட்டியிடும் வேட்பாளர்களும், இந்த வாக்காளர் அத்தனை வேட்பாளர்களிடமும் பணம் வாங்கிக்கொள்ளட்டும். தன்னிடமிருந்தும் பணம் பெற்றதால்,  ஒருவேளை தனக்கும் அவர் வாக்களிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கிறோம் என, தற்காலிக ஆறுதலடைவதுதான். 

சட்டம் என்ன சொல்கிறது?  

 

local election


‘தேர்தலின்போது ஓட்டுக்காக பணமோ, பரிசுப் பொருட்களோ வாங்கினால் லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் வழக்கு பதியப்படும். வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்போர் மற்றும் பணம்  பெறுவோர் மீ்து, இந்திய தண்டனைச் சட்டம் 171 பி பிரிவின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒராண்டு சிறை தண்டனை விதிக்க முடியும்.’

 

local election


இந்த உள்ளாட்சி தேர்தலில் சிவகாசி ஒன்றியத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே வேட்பாளர்கள் பலரும் வாக்குகளை விலைபேசி விட்டார்கள். பறக்கும் படை, தேர்தல் மேற்பார்வையாளர்களின் செயல்பாடெல்லாம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. பெயரளவுக்கே வழக்குகள் பதிவாகின்றன. 

 

local election

 

 

local election

 

வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பதை எடுத்துச்சொல்லும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினமெல்லாம் ஆண்டுதோறும் வந்துபோகிறது. வாக்களிப்பது நம் நாடு நமக்கு அளித்த உரிமை. அந்த உரிமையை மிகச்சரியாகப் பயன்படுத்துவது நமது தலையாய கடமை என்பதை வாக்காளர்களில் பலரும் உணரவில்லை என்பதுதான் நிதர்சனம். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

11 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Rain alert for 11 districts

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் 

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
nn

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் கேரளாவில் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை 10 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி கோவை, நீலகிரி, தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் நள்ளிரவு ஒரு மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.