Skip to main content

அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான கட்சி நிர்வாகியின் கையில் அருவா! - விருதுநகர் மாவட்ட வில்லங்க காமெடி!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

virudhunagar rajendrabalai's opposite party member

 

புதிய நிர்வாகிகள் என 800 பேர் வரை நியமிக்கப்பட்ட விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவில்,  சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனின் ஆதரவாளர்களில் ஒருவருக்குக்கூட இடமில்லாமல் செய்துவிட்டார், விருதுநகர் மாவட்ட பொறுப்பாளரான கே.டி.ராஜேந்திரபாலாஜி. அதனால், எம்.எல்.ஏ. தரப்பு டென்ஷனாக இருக்கிறது என்று  பேசப்படும் நிலையில், ராஜவர்மனின் ஆதரவாளரான, நரிக்குடி அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் தியாகராஜன், நீளமான அரிவாள் ஒன்றை கையில் வைத்திருப்பது போன்ற படங்களை, பெயர் சொல்ல விரும்பாத ஆளும்கட்சி நிர்வாகி ஒருவர்,   நமக்கு அனுப்பிவைத்தார். 


    
தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என ராஜவர்மன் எம்.எல்.ஏ., அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், பேரவை ஒன்றிய செயலாளர் தியாகராஜன் அரிவாளோடு உள்ள போட்டோக்களை அனுப்பிய அந்த நிர்வாகி ‘யாரை மிரட்டுவதற்கு இந்த போட்டோ?’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார். ராஜேந்திரபாலாஜி மீதான ஆத்திரத்தை வெளிப்படுத்தவே, தியாகராஜன் அரிவாளைக் கையிலேந்தி, விதவிதமாகப் போட்டோ எடுத்து, வாட்ஸ்-ஆப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருக்கிறார். அமைச்சருக்கு எதிராக, ராஜவர்மன் தரப்பினரும்,  வீரதீரத்தைக் காட்டத் தொடங்கிவிட்டதாக நரிக்குடி வட்டாரத்தில் பேசுகின்றனர் என்று கொளுத்திப் போட்டார்.  

 

virudhunagar rajendrabalai's opposite party member

 
ராஜவர்மன் எம்.எல்.ஏ.வை தொடர்புகொண்டோம். “தியாகராஜன் கையில் அரிவாளா? ஆச்சரியமா இருக்கு. அவரை மாதிரி ஒரு அப்பாவிய பார்க்கவே முடியாது. ஒருவேளை முள் வெட்டுறதுக்காக அரிவாளைக் கையில் எடுத்திருக்கலாம்.” என்று ’ஜோக்’ அடித்துவிட்டு சிரித்தார்.

 
அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் தியாகராஜனிடம் பேசினோம்.  “அந்த போட்டோ, ஆவாரங்குளத்துல உள்ள என்னோட தோட்டத்துல எடுத்தது. நான் யாரையும் மிரட்டல. கட்டபொம்மன் நாடகத்துல வர்ற வெள்ளையம்மா பாட்டை பாடிக்கிட்டு, அரிவாளை கையில வச்சிருந்தப்ப எடுத்தது. அந்த அருவா,  தகடு மாதிரி வளையும். இது ஒண்ணும் சீரியஸான விஷயம் இல்லீங்க.” என்று சிரித்தார்.  

 

வெட்டு, குத்து, கொலை மிரட்டல் என்று  விவகாரமாகப் பேசினாலும், விருதுநகர் மாவட்ட ஆளும்கட்சியினரின் அரசியல் என்னவோ, காமெடியாகவே இருக்கிறது. 

 


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கு; ‘தண்டனை விவரம் எப்போது’ - நீதிமன்றம் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Nirmala Devi case; 'Details of punishment when' - court announcement

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அப்போது சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்த ராஜேஸ்வரி தலைமையில் 9 தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். நிர்மலாதேவி உள்ளிட்ட மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த விவகாரம் குறித்து அன்றைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். சந்தானமும் விசாரணை நடத்தினார். அதே சமயம் இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இதற்கிடையே பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் (DYFI) மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் தொடர்ந்த வழக்கில், ‘உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மாணவிகள், புகாரளிக்கும் விசாகா கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை? ஆறு ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று காமராஜர் பல்கலைக்கழகத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ‘ஜூன் 7ஆம் தேதிக்குள் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி விளக்கமளிக்க வேண்டும்.’ என்றும் உத்தரவிட்டது. தமிழக அரசுத் தரப்பில்  ‘நிர்மலா தேவி வழக்கில் கீழமை நீதிமன்றம் ஏப்ரல் 26 ஆம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது’எனத் தெரிவிக்கப்பட்டது. 

Nirmala Devi case; 'Details of punishment when' - court announcement

அதனைத் தொடர்ந்து தீர்ப்பு நாளான கடந்த 26 ஆம் தேதி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஆனால் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அப்போது, ‘உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை’ என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். அன்றைய தினம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் இன்று (29.04.2024) வழங்கியுள்ளது. இதற்காக நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2ஆவது மற்றும் 3ஆவது நபர்களான முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபரான பேராசிரியை நிர்மலா தேவியை குற்றவாளி என அறிவித்து அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது தீர்ப்பை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் வாதிட்டார். அதற்கு பிற்பகல் 2.30 மணிக்கு மேல் தீர்ப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில் நிர்மலா தேவிக்கான தண்டனை விவரங்கள் நாளை (30.04.2024) அறிவிக்கப்பட உள்ளது என ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த தீர்ப்பு குறித்து நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் பேசுகையில், “நிர்மலா தேவி குற்றவாளி என உறுதியாகியுள்ளது. அவருக்கு வழங்கக் கூடிய தண்டனை குறித்து விவாதம் செய்ய இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வர சொன்னார்கள். கருப்பசாமி, முருகன் ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தண்டனை விவரம் இன்றோ, நாளையோ வெளியாகலாம்” எனத் தெரிவித்தார். மேலும் இது குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் பேசுகையில், “சமூகத்திற்கு தேவையான தீர்ப்பை இந்த நீதிமன்றம் வழங்கியுள்ளது. முதல் குற்றவாளியான நிர்மலாதேவி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் தரப்பு எதிரிகள் மீது அரசு தரப்பில் குற்றம் நிரூபிக்கபடவில்லை என கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இவர்களுக்கு போதுமான தண்டனைகள் வழங்கக்கூடிய சாட்சிகள் இருப்பதாக அரசு தரப்பு கருதுகிறது. எனவே இது சம்பந்தமாக மேல்முறையீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

Next Story

நிர்மலா தேவி வழக்கு; நீதிபதி பரபரப்பு தீர்ப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Nirmala Devi case; Judge sensational verdict

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவாகி கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அப்போது சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்த ராஜேஸ்வரி தலைமையில் 9 தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். நிர்மலாதேவி உள்ளிட்ட மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த விவகாரம் குறித்து அன்றைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். சந்தானமும் விசாரணை நடத்தினார். அதே சமயம் இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இதற்கிடையே பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் (DYFI) மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் தொடர்ந்த வழக்கில், ‘உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மாணவிகள், புகாரளிக்கும் விசாகா கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை? ஆறு ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று காமராஜர் பல்கலைக்கழகத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ‘ஜூன் 7ஆம் தேதிக்குள் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி விளக்கமளிக்க வேண்டும்.’ என்றும் உத்தரவிட்டது. தமிழக அரசுத் தரப்பில்  ‘நிர்மலா தேவி வழக்கில் கீழமை நீதிமன்றம் ஏப்ரல் 26ஆம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது’எனத் தெரிவிக்கப்பட்டது.

Nirmala Devi case; Judge sensational verdict

அதே சமயம் தீர்ப்பு நாளான கடந்த 26 ஆம் தேதி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் கடந்த 26ஆம் தேதி ஒத்திவைத்த தீர்ப்பினை இன்று (29ஆம் தேதி) வழங்கியிருக்கிறது. முன்னதாக நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதனையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த கருப்பசாமி, முருகன் ஆகிய இருவரையும் விடுதலை செய்தும், இந்த வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனவும் அறிவித்து நீதிபதி பகவதி அம்மாள் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார்.