
கரோனாவிற்குபிறகு உலகத்தை அடுத்தபடியாக அச்சுறுத்தி வருகிறது குரங்கு அம்மை எனும் நோய். பொதுவாக ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்தவைரஸ்முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்தவைரஸ்பாதிப்பு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்தவைரஸ்தொற்று 2017 ஆம் ஆண்டு முதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவியது. தற்பொழுது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த தொற்று பதிவாகிஅதிர்ச்சியைக்கிளப்பியுள்ளது.

அண்மையில் ஐக்கிய அரபுஎமிரேட்ஸிலிருந்துகேரளா வந்த நபர்ஒருவருக்குகுரங்கு அம்மையின் அறிகுறிகண்டறியப்பட்டுள்ளதாககேரளா சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில் தமிழகத்திலும் 4பேருக்குகுரங்கு அம்மை பாதிப்புஇருப்பதாகதகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்றுசெய்தியாளர்களைசந்தித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.அதற்குபதிலளித்த அமைச்சர், ''இந்த தகவல் உண்மையல்ல. அரசு அனைத்தையுமே வெளிப்படைத் தன்மையுடன்அணுகிக்கொண்டிருக்கிறது. அரசின் சார்பில் எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற எந்த யூகங்களுக்கும் நீங்கள் இடம் கொடுக்கக் கூடாது. கனடா மற்றும் யு.எஸ்.ஏ நாட்டில் இருந்துவந்த இருவரின் உடல்நலக்குறைவைகருத்தில் கொண்டு அவர்களது மாதிரிகளைபுனேஅனுப்பினோம். ஆனால்அவர்களுக்குகுரங்கு அம்மை இல்லை என்று முடிவு வந்துவிட்டது. இதற்காக நாமே ஒரு ஆய்வகத்தையும் தொடங்கிவிட்டோம்.ஆசாரி பள்ளத்தில்வந்துச்சு, கன்னியாகுமரியில்வந்துச்சுனுநாமே கற்பனைகதைகளைக்கட்டவிழ்த்து விட வேண்டாம்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)