Published on 09/12/2018 | Edited on 09/12/2018
பேட்ட படத்தில் தான் நடித்திருக்கும் கேரக்டர் பற்றி மனம் திறந்தார் நடிகர் விஜய்சேதுபதி.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் நடித்த ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, தயாரிப்பாளர் கலாநிதிமாறன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் கார்த்திக்சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்றனர்.
விஜய்சேதிபதி மேடைக்கு வந்துபேசி முடித்ததும் அவரிடம், நீங்கள் இந்த படத்தில் ரஜினியுடன் எந்த பாதிரியான கேரக்டரில் நடிக்கிறீர்கள் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கேள்வி எழுப்பியதும், ‘’பெரிய ஆள எதிர்த்து நின்னா அவனும் பெரிய ஆளுதான... ஆமாங்க, நான் ரஜினிசாருக்கு வில்லனா நடிச்சிருக்கிறேன். இந்த படம் செம கெத்தாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.