Skip to main content

அதிமுக விருப்ப மனு விநியோகம் தொடங்கியது!

Published on 22/09/2019 | Edited on 22/09/2019

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தொடங்கியது.
 

சென்னை ராயப்பேட்டை அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. விருப்ப மனுவை பூர்த்தி செய்து நாளை பிற்பகல் 03.00 மணிக்குள் தலைமை அலுவலத்தில் வழங்க வேண்டும் என்று அதிமுக அறிவித்துள்ளது. 

nanguneri and vikkiravandi assembly byelection application form issued admk start now

நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் விருப்ப மனு. அதேபோல் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்.பி ஆர். லட்சுமணன் விருப்ப மனு. இதனிடையே நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சிக்கு ஆதரவளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் 

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Rain alert for 10 districts

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும், விழுப்புரம், நாமக்கல், விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Next Story

தமிழக பாஜக தலைவரின் லண்டன் மர்மம் ! 

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Tamil Nadu BJP President to go to London

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் படுதோல்வி, தேர்தலுக்காக தலைமை கொடுத்த பண விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பாஜகவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக டெல்லி தலைமை தொகுதி வாரியாக தகவல்களை சேகரித்து வருகிறது. 

இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவர் வரும் செப்டம்பர் மாதம் லண்டன் செல்ல திட்டமிட்டிருக்கிறார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இந்த பயணம் என சொல்லப்படும் நிலையில், 5 மாதம் இந்தியாவில் இருக்கமாட்டார் என்றும், மீண்டும் அடுத்தாண்டு ஜனவரி மாத இறுதியில் தான் சென்னை திரும்ப திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த 5 மாதங்களில் தமிழக பாஜக தலைமையில்லாமல் இருக்குமா? அல்லது வேறு ஒரு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? என்கிற கேள்வி கட்சியின் மேல் மட்டத்தில் எழுந்திருக்கிறது. 

அதேசமயம்,  தலைமையில்லாமல் இருக்கும் அந்த 5 மாதங்களும் பாஜகவை  வழிநடத்த உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழு ஒன்று உருவாக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்காக தலைவர் சென்றாலும், நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கிடைத்த 500 ஸ்வீட்ஸ்  பாக்ஸ்களை லண்டனில் பயன்படுத்தவும் இந்த படிப்பு பயணத்தில் திட்டமிட்டிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்களில் பரவியுள்ளது.