Skip to main content

அரசியல் என்ட்ரி; ப்ரேக் போட்ட விஜய்

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

vijay speech in political

 

விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அவ்வப்போது அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளைக் கௌரவிக்கும் வகையில் அவர்களைச் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது. 

 

இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள கூட்டரங்கில் இன்று கல்வி விருது விழா என்ற பெயரில் மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய விஜய், “எனது நெஞ்சில் குடியிருக்கும் நண்பர்கள், நண்பிஸ் எல்லாருக்கும் வணக்கம். நான் நிறைய ஆடியோ, விருது விழாக்களில் பேசியிருக்கிறேன். ஆனால் இதுபோன்ற விழாவில் இப்போதுதான் முதல் முறையாக பேசுகிறேன். உங்களை எல்லாம் பார்க்கும்போது பெரிய பொறுப்புணர்ச்சி வந்த மாதிரி இருக்கு. வருங்கால இளம் நம்பிக்கை நட்சத்திரங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரிய சந்தோசம். உன்னில் என்னை காண்கிறேன் என்ற வாக்கியம் இருக்கிறது. அதுபோலத்தான் உங்களை பார்க்கும் போது என்னுடைய பள்ளி நாட்கள்தான் வந்து போகிறது. 

 

நான் உங்களை மாதிரி ப்ரைட்டான மாணவர் இல்லைங்க. ஒரு ஆவுரேஜ், ஜஸ்ட் பாஸ் மாணவன் தான். நான் ஓர் நடிகராகவில்லை என்றால் அதாயிருப்பேன், இதாயிருப்பேன், டாக்டராயிருப்பேன்னு சொல்லி உங்களை எல்லாம் போரடிக்க விரும்பவில்லை. என்னுடைய கனவு எல்லாம் சினிமா தான். அதை நோக்கித் தான் என்னுடைய பயணம் தொடர்ந்தது. ஒரு வேளை... சரி அதை விடுங்க, இப்ப வேண்டாம்.. என்று சிறிது நேரம் ப்ரேக் விட்டு மீண்டும் மாணவர்களுக்கு அறிவுரைகளை கூறினார். ஒரு வேளை என்று அவர் கூறும்போது அனைவரும் அரசியல் குறித்து எதாவது கருத்து கூறுவார் என்று நினைத்திருந்த நிலையில்  சட்டென அடுத்த கண்டெண்டுக்கு சென்றுவிட்டார் விஜய். 

 

 

சார்ந்த செய்திகள்