கோவையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், ''புதிதாக விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். விஜய்யும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. அவர் கூட விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. பெரும்பான்மையான மக்கள் கொண்டாடுகின்ற விழாக்களை அவர்கள் மதிக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சி அல்லது பொதுச் சேவைக்கு வந்து விட்டால் அனைத்து மக்களையும் ஒருங்கிணைப்பது தான் சிறந்த ஆட்சியாக இருக்கும்.
முதல்வர் ஸ்டாலின் கூட ஓட்டுக்குப் பயந்து கொண்டு வேலை தூக்கினார். அதேபோல் இன்றும் ஓட்டு விழாது என பயந்துகொண்டு உலக முருக பக்தர்கள் மாநாடு நடத்தியுள்ளார்கள். மு.க.ஸ்டாலின் எது எதுக்கோ வாழ்த்து சொல்கிறார். ஏன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வதற்கு அவர்களுக்கு வலிக்கிறதா? விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை. திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், தமிழ்நாட்டினுடைய மக்கள் அதிக பெயரால் கொண்டாடப்படுகின்ற இந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து சொல்லாததை நாம் கடுமையாகக் கண்டிக்கின்றோம்'' என்றார்.