தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை மற்றும் அருகில் உள்ள சில மாவட்டங்களின் சில பகுதிகளை தவிர பிறமாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் மதுப் பிரியர்கள் டாஸ்மாக் கடைகள் முன்பு குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 182 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஐந்து மண்டலங்களில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் மட்டும் ரூபாய் 40 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. நேற்று முன்தினம் 171 கோடிக்கு விற்பனை செய்யப்படிருந்த மதுபானம், பொது ஊரடங்கை முன்னிட்டு நேற்று கூடுதலாக சில கோடிகள் வசூல் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் நேற்று சமூக இடைவெளியை பின்பற்றாமல் குடிமகன்கள் போட்டிபோட்டுக்கொண்டு மது வகைகளை வாங்கிச் சென்றுள்ளனர்.