
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் முகாம் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக எழுதி வந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் அளித்தனர். வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த கம்மவான் பேட்டையை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் தான் ராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும் வீட்டில் தாய் மட்டும் தனியாக உள்ள நிலையில் தங்கள் வீட்டின் அருகாமையில் இடப்பிரச்சனை உள்ளது. தீர்வு காணும் படி வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இடம் மனு அளித்தார்.
மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நான் பதவியேற்ற இரண்டாவது நாளே இவர் என்னிடம் மனு அளித்தார். அதை துறை சார்ந்த அதிகாரிகளிடம் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் நீங்கள் யாரும் எடுக்கவில்லை. நாட்டிற்காக சேவை செய்யும் இது போன்று ராணுவ வீரர்களின் மனுக்களை உடனடியாக என்னவென்று விசாரித்து தீர்வு காண வேண்டும் அதுதான் அதிகாரிகளின் கடமை.
நாட்டிற்காக உழைப்பவர்களை அலைய விடக்கூடாது இன்று மாலைக்குள் இந்த மனு மீதான அறிக்கையை தனக்கு சமர்ப்பிக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அதிகாரிகளை கடிந்து கொண்டார்.