Skip to main content

விநாயகர் விழா வசூலை பங்கு பிரிப்பதில் தகராறு; கூலி தொழிலாளி குத்தி கொலை

Published on 03/09/2019 | Edited on 03/09/2019

 

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் கலைஞர்நகர் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான குமரேசன். அதே பகுதியை சேர்ந்தவர் அதே வயதுடைய சூர்யா. இருவரும் நெருங்கிய நண்பர்கள் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் வேலை செய்து வருகின்றனர். செப்டம்பர் 1 ந்தேதி இருவரும் மூட்டை தூக்கும் போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

b

 

இந்த தகராறு வளர்ந்து இருவரும் அடித்துக்கொண்டுள்ளனர். அப்போது சூர்யா தான் வைத்திருந்த சிறு கத்தியால் குமரேசனை வயிற்றிலும், கழுத்திலும் குத்தியுள்ளான். இதில் குமரேசன் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவயிடத்திலேயே பலியானார்.

 

இதனை பார்த்து அதிர்ச்சியான சூர்யா, அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இது குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பத்தூர் நகர போலிசார் கொலையாளியை வலை வீசி தேடிவருகின்றனர். 

 

மூட்டை தூக்கும் வேலை செய்த இருவரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர்ச்சியாக மூட்டை தூக்கிபோடும் கடைகளில் விழா பணம் வாங்குவது வழக்கம். அப்படி வாங்கிய பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு வந்தது. அது கொலையில் முடிந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.


 

சார்ந்த செய்திகள்