Published on 17/12/2018 | Edited on 17/12/2018
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் காவல் நிலையம் சென்று எச்.ராஜாவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி புகார் மனு கொடுத்தனர்.