Skip to main content

கொங்கு மண்டலத்தில் பத்து சதவீத ஓட்டு! - அடித்து கூறும் வானதிசீனிவாசன்

Published on 08/02/2019 | Edited on 08/02/2019
va

 

கொங்கு மண்டலத்துல பா.ஜ.க.வுக்கு ஓட்டே இல்லைனு யாருங்க சொன்னது? ஓட்டு இல்லாத ஊருக்கு பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி வர்றார்னு பொய் பிரச்சாரம் செய்யறாங்க..... கொங்கு மண்டலத்தில் பத்து சதவீத ஓட்டு இருக்கிறது என சற்று ஆவேசமாகத்தான் பேசத் தொடங்கினார் வானதி சீனிவாசன். 

 

தமிழக பா.ஜ.க. செயலாளர்களில் ஒருவரான வானதி இன்று ஈரோடு அருகே உள்ள சித்தோட்டுக்கு வந்திருந்தார். இந்த சித்தோட்டுக்கு தான் பா.ஜ.க.வின் தேசிய தலைவரான அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் செய்ய 14.2.19 ந் தேதி வருகிறார். இங்கு பொதுக் கூட்ட இடத்தை பார்வையிட்டு விட்டு செய்தியாளர்களிடம் பேசிய வானதி மேலும்,  "கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க.  வலுவாகவே இருக்கிறது. ஏற்கனவே கோவை மற்றும் நீலகிரி எம்.பி. தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளோம். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டனி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் நாங்கள் இரண்டாம் இடம் வந்தோம்.  தி.மு.க.மூன்றாம் இடம் போனது. உறுதியாக கூட்டணி அமைத்து தான் போட்டியிட போகிறோம்.  மிக விரைவில் கூட்டணி அறிவிப்பு வரும்.  அதில் எந்தெந்த கட்சிகள் என்று முறைப்படி கட்சி தலைமைகள் வெளியிடும் . இந்த கொங்கு மண்டலத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் பா.ஜ.க. மற்றும் எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தான் உறுதியாக வெற்றி பெறுவார்கள்" என்ற அவர் "தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு  மோடி எதிர்ப்பாளர்களின் தலைவர் என்ற அடையாளம் ஏற்பட்டுள்ளது." என்றார்.

 

சார்ந்த செய்திகள்