சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்துறையில் 2018-19 கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு சமவாய்ப்பு (ரேண்டம்) எண்ணை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் வெளியிட்டார். பின்னர் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இளங்கலை வேளாண்மை அறிவியல் பாடத்தில் மொத்தம் 1000 சீட்டுக்கள் உள்ளது. இதில் அரசு ஒதுக்கீடு பிரிவில் 500-ம், சுயநிதி பிரிவில் 500-ம் என ஒதுக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை பிரிவில் 70 சீட்டுகள் உள்ளது. அரசு ஒதுக்கீட்டில் 8244 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் 8050 விண்ணப்பம் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.
சுயநிதி ஒதுக்கீட்டில் 2202 விண்ணப்பங்கள் வந்துள்ளது. அதில்2173 விண்ணங்கள் தகுதியானவை. தோட்டக்கலைதுறையில் 887 விண்ணப்பத்திற்கு 870 தகுதியானவை. ஜூலை 15-ந்தேதிக்குள் கலந்தாய்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். கலந்தாய்வுக்கு வேளாண் அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரை அழைக்க உள்ளோம். சரியான தேதியை அரசு தான் முடிவு செய்யும். மேலும் இந்த ஆண்டு சுயநிதி வேளாண்மை பிரிவில் 200 சீட்டுகள் அதிகபடுத்த அனுமதி கேட்டுள்ளோம். கிடைத்தால் வரும் கல்வி ஆண்டு முதல் கூடுதலாக 200 மாணவர்களை சேர்க்க வாய்ப்பு இருக்கும் என்றார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் ஆறுமுகம், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் திருவள்ளுவன் உள்ளிட்ட அனைத்து துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.