
வேறொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் சராமரியாக அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் இறந்த பெண்ணின் கணவர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மும்மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவருடைய மனைவி தங்கமாரியம்மாள். கட்டிட வேலை செய்து வரும் ஹர்கிருஷ்ணன், ஊரில் தொழில் வாய்ப்பு இல்லாததால் கேரளா மாநிலத்தில் பணிபுரிகிறார். இதே ஊரைச் சேர்ந்த, கட்டிட தொழில் செய்து வரும் திருமணமான பெருமாளுக்கும். தங்க மாரியம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். சமீபத்தில், கேரளாவில் மழை பெய்த காரணத்தினால் வேலை இல்லாத காரணத்தினால் ஹரி கிருஷ்ணன் ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் தனது மனைவி தங்கமாரியம்மாள் தீடீரென காணமால் போனதால் அதிர்ச்சியடைந்த ஹரிகிருஷ்ணன் தனது மனைவியை தேடி சென்று பார்த்த போது அருகில் இருந்த காட்டுப்பகுதியில் தங்கமாரியம்மாளும், பெருமாளும் தனிமையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தது மட்டுமின்றி, ஆத்திரத்தில் தன்னுடைய பாதுகாப்புக்காக கொண்டு சென்ற தனது அரிவாளால் இருவரையும் வெட்டி படுகொலை செய்து விட்டு, கடம்பூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகாத உறவு முறையினால் இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.