Published on 05/05/2023 | Edited on 05/05/2023

திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் முகவரி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளரால் பெறப்பட்ட 71 மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் முன்னிலையில் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு மனுதாரர்கள் நேரடியாக வரவழைக்கப்பட்டு புகார் மற்றும் மனுவில் சம்பந்தப்பட்ட தரப்பினரையும் விசாரணை மேற்கொண்டதில் 52 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
மேலும் 19 மனுக்களுக்கு மேல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுக் கூடிய விரைவில் அதற்கும் தீர்வு காணப்படும் என இந்த குறைதீர்ப்பு முகாம் மூலம் மனுதாரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.