தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் அருகே இருக்கும் மேகமலை சுற்றுலாத்தளமாக விளங்கி வருகிறது. இந்த எழில் கொஞ்சும் மேகமலையின் இயற்கையை ரசிப்பதற்கு தமிழகத்திலிருந்து தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தினசரி வந்து போய் வருகிறார்கள்.
இந்நிலையில் தான் மேகமலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்துள்ளது மாவட்ட காவல்துறை.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழை பெய்துவருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக கேரளாவில் மட்டும் 30 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அங்கங்கே மக்கள் வெள்ளத்தால் சிக்கி தவித்தும் வருகிறார்கள். இந்நிலையில் தான்
மேகமலைப்பகுதியில் தொடர்ந்து பெய்துவருவதால் மழை காரணமாக தென்பழனி முதல் ஹைவேஸ் வரையிலான சாலையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என கூறி சுற்றுலாப்பயணிகள் மேகமலை செல்ல தடை விதித்துள்ளது மாவட்ட காவல்துறை. இதற்கான அறிவிப்பை தென்பழனி சோதனைச் சாவடியில் காவல்துறை சார்பில் ஒட்டப்பட்டுள்ளது. இதனை ஏற்று வனத்துறையும் மேகமலைக்கு சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்காமல் தொடர்ந்து இரண்டாலது நாளாக சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றார்கள்.
மேகமலை, ஆனால் ஹைவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, இரவங்கலாறு போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது.... மேகமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சில இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் மறு உத்தரவிடும் வரை சுற்றுலாப் பயணிகள் யாரும் மேகமலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம். அதனால் தான் போலீஸ் பாதுகாப்பு போட்டு இருக்கிறோம் என்று கூறினார்கள்.