Skip to main content

டி.டி.வி. தினகரன் நியமித்த புதிய நிர்வாகிகள் நியமனம் என்பது கேள்விக்குறிதான்: ஜெயக்குமார்

Published on 05/08/2017 | Edited on 05/08/2017
டி.டி.வி. தினகரன் நியமித்த புதிய நிர்வாகிகள் நியமனம் என்பது கேள்விக்குறிதான்: ஜெயக்குமார்

துணைப்பொதுச்செயலாளர் நியமனமே கேள்விக்குறியாக இருக்கும் போது டி.டி.வி. தினகரன் நியமித்த நிர்வாகிகள் பட்டியல் கேள்விக்குறிதான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமித்து பட்டியல் வெளியிட்டார். இந்நிலையில் இன்று எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ், எம்.எல்.ஏ., சத்யா பன்னீர் செல்வம், எம்.எல்.ஏ., பழனி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த நிர்வாகி பொறுப்புகளை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார், இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் நியமன விவகாரம் கோர்ட்டிலும் தேர்தல் கமி‌ஷனிலும் ‘பெண்டிங்’ உள்ளது. இந்த விவகாரம் ‘பெண்டிங்’ இருக்கிற சூழ்நிலையில் துணைப் பொதுச்செயலாளர் நியமனமும் கேள்வி ஆகும். அவரது நியமனமே கேள்விக்குறியாக இருக்கும் போது இவர் வெளியிட்டுள்ள புதிய நிர்வாகிகள் நியமனம் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்