
திருவண்ணாமலையில் தொடர்ந்து பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் திருவண்ணாமலை வ.உ.சி நகரில் நேற்று இரவு மண் சரிவு ஏற்பட்டிருந்தது. மலை அடிவாரத்தில் இருக்கும் வ.உ.சி நகரில் மண்சரிவு ஏற்பட்டதில் பல வீடுகள் பாதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக ஒரு வீட்டில் இருந்த ஏழு பேரின் நிலை என்னவானது என்று தெரியாத அளவிற்கு தற்பொழுது வரை மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
வஉசி நகர் மட்டுமல்லாது டிசம்பர் இரண்டாம் தேதியான இன்று காலையும் திருவண்ணாமலை தெற்கு பகுதியில் மலைப்பகுதியின் உச்சியில் சத்தம் கேட்டது. சுமார் ஆயிரம் அடி அளவில் மண்சரிவு அடுத்தடுத்து நிகழ்ந்தது. சிறிய பாறைகள் முதல் பெரிய பாறைகள் வரை சரிந்து உருண்டு வந்தது. மாவட்ட நிர்வாகமும் பேரிடர் மீட்புக் குழுவும் அந்தப் பகுதியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது வரை அந்த பகுதியில் விட்டுவிட்டு மழை பொழிந்து வருகிறது. தற்போது பச்சை பசேல் என இருக்கும் திருவண்ணாமலையின் உச்சியிலிருந்து மண் சரிந்தது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளது.