Skip to main content

தூத்துக்குடி, நெல்லையில் முதல்வர் இன்று ஆய்வு

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
 Thoothukudi, Nellai Chief Minister inspected today

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மாநிலப் பேரிடர் மீட்புக் குழு, தேசியப் பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், நேற்று மத்திய குழு வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய இருக்கிறார்.

சென்னையில் இருந்து காலை 10:15 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் அவர், அங்கு வெள்ள சேதங்களை பார்வையிட்டு விட்டு அங்கிருந்து நெல்லை சென்று அங்கும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்ய இருக்கிறார்.

சார்ந்த செய்திகள்