கரோனா பரவல் தமிழகத்தில் தொடங்கிய மார்ச் இறுதி வாரத்தில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் தங்களது தொகுதி நிதியில் இருந்து மருத்துவ பணிகளுக்காக நிதியை ஒதுக்கினர். எம்.பிக்கள் ஒரு கோடி ரூபாயும், எம்.எல்.ஏக்கள் 25 லட்ச ரூபாயும் ஒதுக்கி தந்தனர்.
இந்நிலையில் இரண்டாவது கட்டமாக மீண்டும் நிதி ஒதுக்கும் வேலையில் திமுக எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேலும் 10 லட்ச ரூபாய், கரோனா மருத்துவ பணிக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நிதி ஒதுக்கியுள்ளார்.
அதேபோல் போளுர் சட்டமன்ற உறுப்பினர் கே.வி.சேகரன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்ச ரூபாயை ஒதுக்கியுள்ளார். செங்கம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ மு.பெ.கிரி 10 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி அதற்கான கடிதத்தை மாவட்ட ஆட்சித்தலைவரான கா.சு.கந்தசாமியிடம் வழங்கினார்கள்.