![thieves caught on patrol](http://image.nakkheeran.in/cdn/farfuture/s0a8MWhGDumLwYqeNXgXBAq50igA2PCP4NQLMspqt2k/1633432730/sites/default/files/inline-images/villupuram-aravindh-thied.jpg)
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா IPS உத்தரவின் பேரில் நேற்று முன் தினம் (03.10.2021) செஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் சக்தி, உதவி ஆய்வாளர் நடராஜன் மற்றும் காவலர்கள் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தீவனூர் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அதில் செஞ்சி உட்கோட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் கண்ணக்களவு திருட்டில் ஈடுபட்டு வந்த செஞ்சியைச் சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன்(29), திண்டிவனத்தைச் சேர்ந்த பரசுராமன் மகன் அரவிந்தன் என்ற சுபாஷ்(26) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கண்ண களவு திருட்டில் ஈடுபட்டு வந்ததாக ஒப்புக் கொண்டதன் பேரில் அவர்களிடமிருந்து பணம் ரூபாய் 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.