Skip to main content

'சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருப்பதாக தெரியவில்லை' - முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
 'There doesn't seem to be any relaxation in arrest measures' - Chief Minister M.K.Stal's letter

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 28 பேரை 24 மணி நேரத்தில் இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கோடியக்கரைக்கு அருகில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். பொங்கல் நாள் இரவில் இலங்கை கடற்படை அவர்களை சுற்றிவளைத்து கைது செய்துள்ளது. அதேபோல், பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 2 படகுகளுடன் மீன் பிடிக்கச் சென்ற 18 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது.

தொடர்ச்சியாக 28 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் 'இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகையைச் சேர்ந்த 10 மீனவர்களும், பாம்பனை சேர்ந்த 18 மீனவர்களும் கடந்த மூன்று நாட்களில் இலங்கை கடற்படையினரால் அடுத்தடுத்து சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கை, மீன் பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ள மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது. இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருப்பதாக தெரியவில்லை. இந்த விவகாரத்தை இலங்கை அரசுக்கு உரிய தூதராக வழிமுறைகள் மூலம் எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்