Published on 26/12/2018 | Edited on 26/12/2018

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மொழிப்பாட தேர்வுகளின் நேரம் மாற்றியமைக்கபட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய தேர்வுகள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் எனவும் மற்ற பாட தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு வரும் மார்ச் 14 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நேர மாற்றம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.