Skip to main content

எலிகளை உறித்து பதப்படுத்தி டாஸ்மாக் பார்களில் முயல்கறியாக்கும் முருகன்

Published on 19/06/2019 | Edited on 19/06/2019

 

  டாஸ்மாக் பார்களில் எலிக்கறியை முயல்கறி என விற்பனை செய்வதாக எலிக்கறி கொடுப்பவரே ஒப்புதல் அளிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

e


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கூத்தாடிவயல் பகுதியை சேர்ந்தவர் முருகன். பழங்குடியினத்தைச் சேர்ந்த முருகன் விவசாயிகளின்  பயிர்களை நாசம் செய்யும் எலிகளை பிடிக்க குத்தகை பேசிக் கொண்டு கிட்டி அமைத்து எலிபிடிப்பது அவரது தொழில். பிடிக்கப்படும் எலிகளையும் எடுத்துக் கொண்டு வயல் காரர்களிடம் குத்தகை பணமும் வாங்கி வருவார்.


பிடிக்கப்படும் எலிகளை வீட்டிலேயே உறித்து பதப்படுத்தி அறந்தாங்கி, பெரியாளூர், பேராவூரணி அருகில் உள்ள சித்தாதிக்காடு கிராமங்களில் உள்ள டாஸ்மாக் பார்களுக்கு விற்பனை செய்து வருகிறார். ஒரு எலி ரூ 20 க்கு வாங்கும் டாஸ்மாக் பார் காரர்கள் அதை துண்டுகளாக வெட்டி சமைத்து முயல் கறி என்று குடிமகன்களிடம் விற்பனை செய்து வந்துள்ளனர். இது சம்மந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


இது குறித்து முருகனின் உறவினர்கள் கூறும் போது.. எலிக்கறியை தான் பார்க்கிறார்கள் வாங்குகிறார்கள். அதை முயல்கறி என்று பார்களில் விற்பதாக இப்போது சொல்கிறார்கள். ஆனாலும் எலிக்கறியால் உடலுக்கு தங்கு வராது என்கின்றனர்.  ஆனால் குடிமகன்களோ.. எலிக்கறியை முயல் கறி என்று பார்களில் விற்பது கொடுமையானது. அதிலும் அனுமதி இல்லாத பார்களில் தான் அதிகமாக விற்கிறார்கள். இனிமேல் நாய் கறியை மான் கறி என்று விற்றாலும் விற்பார்கள் என்றனர்.
 

சார்ந்த செய்திகள்