Skip to main content

24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

 

nn

 

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் 31ம் தேதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து  பிப்ரவரி 1ஆம் தேதி இலங்கை கடற்பகுதியை சென்றடையும். நிலநடுக்கோட்டை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த  காற்றழுத்த தாழ்வு அதே பகுதியில் நீடித்து வருகிறது.

 

அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும். இதனால் நிலநடுக்கோட்டை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் கிழக்கு பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  இன்று வறண்ட வானிலையும் நாளை முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !