இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகின்றனர் . இதனால் நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர் . இந்நிலையில் இது தொடர்பான விவரங்களை தினமும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. இதன் படி மே 1 ஆம் தேதி வரை சுமார் 3291.32 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் உள்ளிட்டவை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .
இதில் ரூபாய் 789.435 கோடி பணமும் , ரூபாய் 253.976 கோடி மதிப்பிலான மது பானமும் , ரூபாய் 972.428 கோடி மதிப்பிலான கணக்கில் வராத தங்கம் , வெள்ளி பறிமுதல் செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது . மேலும் கணக்கில் வராத பணம் மற்றும் மற்ற பொருட்களின் பறிமுதலில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது .அதே போல் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக பணம் மற்றும் தங்கம் , வெள்ளி பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் . அதனை தொடர்ந்து இந்தியாவில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பில் தமிழகத்தில் சுமார் 30% பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .