Published on 23/10/2020 | Edited on 23/10/2020
சென்னை நுங்கம்பாக்கத்தில், வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "அக்டோபர் 26, 27- ஆம் தேதிகளில் காற்றின் திசைமாறக்கூடும். தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை அக்டோபர் 28- ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது. அதேபோல், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா, ராயலசீமா கடற்பகுதியிலும் வட கிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.
வட கிழக்குப் பருவமழை, வட தமிழகத்தில் இயல்பாகவும், தென்தமிழகத்தில் இயல்பை விடக் குறைவாகவும் இருக்கும். வளிமண்டலத்தின் அடுக்குகளில் ஏற்படும் சுழற்சியால், தற்போது மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது." இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.