உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோர் விருப்ப மனு அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவம்பர் 15,16 இல், கட்சி அமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகங்களில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் பெறப்பட்ட விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை வழங்கலாம்.

விருப்ப மனுக்களுக்கான கட்டணத்தையும் அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதன் படி மாநகராட்சி பதவிக்கு ரூபாய் 25,000, வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூபாய் 5,000, நகர்மன்ற தலைவர் பதவிக்கு ரூபாய் 10,000, நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூபாய் 2,500, பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூபாய் 5,000, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூபாய் 1,500 விருப்பமனு கட்டணம். அதேபோல் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு ரூபாய் 5,000 செலுத்த வேண்டும். ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூபாய் 3,000 விருப்ப மனு கட்டணம் ஆகும்.