Skip to main content

எல்லோருக்கும் படியளப்பாரா எம்பெருமான்?- யானை, குதிரை, குரங்குகளுக்கு உணவூட்டிய அமைச்சர்! 

Published on 16/05/2020 | Edited on 16/05/2020

 

tamilnadu minister rajendra balaji provide foods for animals


“எல்லோருக்கும் படியளப்பார் எம்பெருமான்..” என்று ஒருவர் கூற, “காலையிலிருந்து ஒரு எறும்பை இந்தக் குப்பியிலே அடைத்து வைத்திருக்கிறேன். இந்த எறும்புக்கு உன்னுடைய எம்பெருமானால் எப்படிப் படியளந்திருக்க முடியும்?” என்று அவரை இன்னொருவர் மடக்க, “குப்பியைத் திறந்து பார்..” என்பார், எம்பெருமான் மீது நம்பிக்கை கொண்டவர். பெட்டியைத் திறந்து பார்த்தால், அந்த எறும்பு ஒரு அரிசியைக் கவ்விக் கொண்டிருக்கும்.
 

 

tamilnadu minister rajendra balaji provide foods for animals


தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இந்தக் காட்சியை டிவியில் பார்த்தபடியே “அட, ஆமாம்பா.. இந்தக் கரோனா லாக்டவுன் நேரத்துல விருதுநகர் மாவட்டத்துல சுற்றிச் சுற்றி வந்து நிவாரணம் கொடுத்துக்கிட்டிருக்கோம். மனிதர்கள் போலத்தானே ஜீவராசிகளும்.. நமது மாவட்டம் திருச்சுழியிலே பிறந்த பகவான் ரமண மகரிஷி நாய், பசு, அணில், குரங்கு என சகல ஜீவராசிகளையும் மனிதர்களைப் போல, அதுவும் குழந்தைகளைப் போலவே பாவிப்பாராம். ஜீவராசிகளைப் பசங்க என்றே சொல்வாராம். மிருகங்களைக்கூட அவன், அவள் என்று உயர் திணையிலேயே குறிப்பிடுவாராம். நான் இதைப் படிச்சிருக்கேன்.” என்று வீட்டில் இருந்தவர்களிடம் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார். 
 

tamilnadu minister rajendra balaji provide foods for animals


மறுநாள் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற அமைச்சர், அங்கு ஆடிப்பூர கொட்டகையில், யானை மண்டபத்தில் இருந்த யானைக்கு பூசணிக்காய், வெல்லம், பழங்களெல்லாம் கொடுத்தார். அடுத்து ராஜபாளையம் வனப்பகுதிக்குச் செல்லும் வழியில், குதிரை, பசுமாடுகளுக்குப் பழங்களை ஊட்டிவிட்டார். மேற்குத் தொடர்ச்சிமலை வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான குரங்குகள் அவரைச் சூழ்ந்துகொள்ள, வாழைப்பழங்கள் கொடுத்தார். அப்படியே, மலைவாழ் மக்களான பழங்குடியினருக்கும் அரிசி, காய்கறிகள், போர்வைகளைக் கொடுத்துவிட்டு, “என்னமோ விட்டுப்போச்சுன்னு நினைச்சேன். இப்ப எல்லாம் சரியாயிருச்சு. மனுஷன மாதிரி்தானே விலங்குகளும்? வீட்ல வளர்க்கிற நாயை நல்லா பார்த்துக்கிறோம்ல. வேளாவேளைக்குச் சோறு வைக்கிறோம்ல. அதுகணக்கா, ரோட்டுல, காட்டுல திரியிற விலங்குகளையும் காப்பாத்துறதுக்கு நாம கடமைப்பட்டிருக்கோம்.” என்று மெய்சிலிர்த்து, நட்பு வட்டத்தில் உள்ளவர்களையும், இதே ரீதியில் ‘கருணை மழை’ பொழியும்படி அறிவுறுத்தியிருக்கிறார்.  
 

 

tamilnadu minister rajendra balaji provide foods for animals


நல்லவேளை, இம்சை அரசன் 23- ஆம் புலிகேசி திரைப்படத்தில், எதற்கெடுத்தாலும் வடிவேலுவை புகழும் புலவர்கள் போல யாரும் கே.டி.ராஜேந்திரபாலாஜி அருகில் இல்லை. இருந்திருந்தால் ‘நீ வாழ்க! நின் கொடை வாழ்க!’ என்று  பாராட்டி, தகுந்த வெகுமதி பெற்றிருப்பார்கள். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவி; எதிர்பாராத விதமாக நடந்த சோகம்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Airborne tragedy in gaza by america

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். 

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. 

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 57,614 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. அதனை அவரே செய்தி சேகரிப்பின் நேரலையில் கூறியது பலரையும் கலங்க வைத்தது. 

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்த போர் குறித்து ஐ.நா கூறுகையில், ‘இஸ்ரேல் - காசா இடையே நடைபெறும் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க, பட்டினியால் ஏற்படும் உயிரிழப்புகள் நடப்பது கொடுமையாக இருக்கிறது. காசா பகுதியில் 4இல் ஒருவர் பசியால் வாடுகிறார்கள்’ என்று கூறி கவலை தெரிவித்தது. இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, காசா மக்களுக்கு வான்வழி உணவு மற்றும் உதவி பொருட்கள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. 

Airborne tragedy in gaza by america

அந்த வகையில், நேற்று (09-03-24) காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷாதி என்ற இடத்தில் உள்ள மக்களுக்கு பாராசூட் மூலம் உணவுப் பொருட்களை அமெரிக்கா விநியோகம் செய்து கொண்டிருந்தது. அப்போது, ஒரு பாராசூட் விரியாமல் திடீரென பழுதானது. இதனால் அந்த பாராசூட், உணவுப் பொருட்களுடன் மக்கள் கூடியிருந்த பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் பரிதாபமாக 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து காசா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து, காசா செய்தித் தொடர்புத்துறை கூறுகையில், ‘இந்த திட்டத்தை பற்றி முன்கூட்டியே எச்சரித்தும் அமெரிக்க அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிகள் என்ற பெயரில் எங்கள் மக்களை மேலும் கொல்லாதீர்கள்’ என்று தெரிவித்துள்ளது. 

Next Story

சென்னை - புனே ரயில் பயணம்; 40 பயணிகளுக்கு உடல்நலக் குறைவு

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Chennai - Pune Train Travel; 40 passengers fell ill

 

சென்னை - புனே ரயிலில் பயணம் செய்த பயணிகளில் 40 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னையிலிருந்து புனேவுக்கு பாரத் கவுரவ் என்ற சுற்றுலா ரயில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது ரயிலில் பயணித்த பயணிகளுக்கு ரயில்வே சார்பில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. அதன்படி ரயிலில் வழங்கப்பட்ட இரவு உணவை சாப்பிட்ட 40 பயணிகளுக்கு ஒரே நேரத்தில் ஒவ்வாமை பாதிப்பு காரணமாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

 

ஒரே நேரத்தில் 40 பேருக்கும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரயில் பூனே சென்றவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.